Breaking News

யாழில் தனியே மாட்டிய தனுரொக்கிற்கு நேர்ந்த கதி

மானிப்பாயைச் சேர்ந்த வன்முறை கும்பலுடன் தொடர்புடையவர் என நம்பப்படும் தனு ரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலுக்கு முன்பாக மணிக்கூட்டு வீதியில் இன்று நண்பகல் இந்த வாள்வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது.

காரில் வந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வாளால் வெட்டிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நேற்று இரவு நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *