Breaking News

யாழின் இன்றைய நிலவரம்!! முடிவுகள் வெளியாகின.

மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த பருத்தித்துறை வாசிக்கு கோரோனா தொற்று இல்லை என ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

அவர் ஆஸ்துமா நோயாளி. கடந்த மூன்று நாள்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

எனினும் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது” என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாவந்துறையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் மாதிரிகள் கோரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்ற நாவந்துறையைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தபட்டுள்ளனர்.

அவர்களில் 8 பேரின் மாதிரிகளே கோரோனா தொற்றுள்ளமை தொடர்பான பரிசோதனைக்கு இன்று பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அவர்கள் 8 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

இதேவேளை, யாழில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம் தொடார்பாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல் தருகையில், இன்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா COVID – 19 தொற்று இல்லை என தெரிவித்தார்.

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் 8 பேருக்கும் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கும் பரிசோதனைகள் ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நடளாவியரீதியில் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய சிகிச்சை பெற்றுவந்த மேலும் நால்வர் முழுமையாகக் குணமடைந்து வீடுதிரும்பினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 178 பேர் (ஜனவரியின் இனங்காணப்பட்ட சீனப் பெண் உள்பட) கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34 (சீனப் பெண் உள்பட) முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் மேலும் நான்கு பேர் நோய்த் தாக்கத்திலிருந்து மீண்டு இன்று திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் 178 பேரில் 38 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.5 பேர் உயிரிழந்துள்ளனர்.

135 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *