Breaking News

கொழும்பில் கை விடப்பட்ட இ ளைஞர்கள்! கை கொடுப்பவர்கள் யார்?

கொழும்பு மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாலும், வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கு த டை விதிக்கப் பட்டுள்ளதாலும் சுமார் 40 மலையக இ ளைஞர்கள் தலைநகரில் நிர்க்கதி யாகியுள்ளனர்.

அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ளமுடியாமல் தெருவோரங்களில் தங்கி – வலி களை சும ந்தபடி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களை பொறுப்பேற்பதற்கு பொலிஸார் மறு ப்பு தெரிவித்துவிட்டனர் என்றும், பொது மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரை இருந்தால் மட்டுமே பெறுப்பேற்க முடியும் என ராணுவம் அறிவித்தது என்றும் இ ளைஞர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

கொழும்பு மாநகரசபையும் இது விடயத்தில் எவ்வித பதிலையும் இன்னும் வழங்கவில்லை.

அதேபோல் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இவர்கள் சொந்த ஊருக்கு அனுப்படும் சூழ் நிலையும் காணப்படுகின்றது.

தற்போதைய சூழ் நிலையில் அவர்கள் தங்குவதற்கு இடமொன்று தேவைப்படுகின்றது.

எனவே, ஆலயத்திலோ, விகாரையிலோ, பள்ளிவாசலிலோ, தேவாலயத்திலோ அதற்கான அனுமதி வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்குமென இ ளைஞர்கள் கருதுகின்றனர்.

அவ்வாறு இல்லாவிட்டால் தம்மை சொந்த ஊரிலாவது சுயதனிமைக்கு உட்படுத்தி விடுவிக்குமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *