Breaking News

தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சி சுவின் சட லம் மீட்பு

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் 04.04.2020 அன்று மாலை சட லமாக மீட்கப்பட்டுள்ள சி சு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று (05.04.2020) முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை டயகம பிரதான வீதியில் அகரகந்த தோட்ட பகுதியில் பிரதான வீதிக்கு அருகாமையிலேயே இவ்வாறு ச டலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ச டலம் முழுமையாக சிதை வடைந்திருந்ததால் குழ ந்தை உடலின் ஒரு பாகமே கண்டறியப்பட்டுள்ளது. குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழ ந்தையொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சி சுவின் சட லம் குறித்து நீதவானின் ஸ்தல விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மேலதிக விசாரணைக்காகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸார் ஊடாக சட லம் நுவரெலியா வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *