Breaking News

Update: நேற்றுமுன்தினம் பெறப்பட்ட மாதிரிகளில் எவருக்கும் கொரோனா தொற்றில்லை

தாவடி, மானிப்பாய் ,அரியாலை பகுதிகளில்நேற்று முன்தினம் 18 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்றில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வரை 7 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களென இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த பணிப்பாளர் சில ஊடகங்கள் பொய்யான செய்தி பரப்புவதற்கும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அச்சு ஊடகத்தில் வெளியாகியிருந்த செய்தி-

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று பின்னிரவு வெளியான பரிசோதனை முடிவுகளில் இது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

சுவிஸ் போதகருடன் தொடர்புபட்டு கொரோனா தொற்றிற்கு இலக்கான கட்டிட ஒப்பந்தக்காரர் வசிக்கும் தாவடி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 18 பேரிடம் நேற்று முன்தினம் (3) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளிலேயே, இந்த தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணத்தில் முதல் கொரோனாத் தொற்றாளி தாவடியில் கண்டுபிடிக்கப்பட்டார். இவர் சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த மத போதகரை நேரில் சந்தித்து உரையாடிய கட்டட ஒப்பந்தக்காரர் ஆவார்.

இதையடுத்து அவர் வாழ்ந்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மத்தியிலேயே தெரிவு செய்யப்பட்ட18 பேரின் இரத்த மாதிரிகள் நேற்றுமுன்தினம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அதில் மூவருக்கே கொரோனா தொற்று இருப்பதாக நேற்றிரவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாக அறியவந்தது. இது பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கையை மருத்துவர்கள் இன்று காலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தாவடியில் இரத்த மாதிரி எடுக்கப்பட்ட மற்றைய 15 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்று இருப்பதாகக் காணப்பட்ட மூவரும் இதற்கான சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது” என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *