Breaking News

நாயை து ன்புறுத்தினாராம்!! அயல் வீட்டுகாரரினால் இ ளைஞன் அடி த்துக் கொ லை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இ ளைஞர் ஒருவர் அ டித்து கொ லை செய்யப்பட்டுள்ளார்.

குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயி ரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்

நேற்றுமுன்தினம்(02.04.2020) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் நாயை அந்த வீட்டில் வசித்த இளைஞன் கட்டி வைத்துள்ளார்.

இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இளைஞருடன் வாக்குவாதப்பட்டு வாக் குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறிய நிலையில் குறித்த இ ளைஞன் மீது தாக் குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தலையில் பலத்த கா யங்களுக்கு உள்ளான இ ளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு(03.04.2020) சிகிச்சை பலனின்றி உயி ரிழந்துள்ளார்

இ ளைஞன் உயி ரிழந்ததை தொடர்ந்து இன்றைய தினம் அந்தபகுதியில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் முல்லைத்தீவு பொலிசாரால் விசா ரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *