Breaking News

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர் ம ரணம்

இலங்கையில் கோரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்குள்ளான நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜெயசிங்க அறிவித்துள்ளார்.

இதன்மூலம் கோரோனா வைரஸ்தொற்றால் இலங்கையில் பதிவான 5 ஆவது உயிரிழப்பு இதுவாகும்.

இத்தாலியில் இருந்து இலங்கை திரும்பிய 44 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 159 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் முழுமையாகக் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *