Breaking News

யாழில் இரு யுவதிகள் மற்றும் இளைஞன் மீதும் பாய்ந்தது கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

15 வயதுடைய சிறுமி 36 வயதுடைய பெண் மற்றும் 20 வயதுடைய இளைஞன் ஆகிய மூவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் அரியாலையைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்ரவன் தெரிவித்தார்.

இவர்கள் மூவரும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்ததாவது,

பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். தாய்,மகன், மகள். இவர்கள் அரியாலை முள்ளி வீதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *