Breaking News

யாழில் அல்லேலூயா கூட்டத்தில் மூன்று கறுப்பாடுகள்!! கொரோனாவால் பறிபோனது மூன்றாவது உயிர்

பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் தொற்றே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஆகவே இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் சுவிஸ் போதகருடன் நேரடியாக இருந்தமையால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆவார்.

ஆகவே கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்

இதேவேளை, கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

மருதானையைச் சேர்ந்த 72 வயதான இஸ்லாமியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக சென்றிருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நான்கு மணி நேர தாமதம் ஏற்பட்டுள்ளது.

அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *