Breaking News

யாழில் ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து த ந்தை ம கன் மீது கோ ர தா க்குதல்!

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.கொடிகாமம் பகுதியில் இரு வீட்டாருக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோ தலாக முடிந்த நிலையில் தந்தையும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் கொடிகாமம் சந்தை வீதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் செ.லோகேஸ்வரன் (வயது-45) மற்றும் அவரது மகன் லோகேஸ்வரன் மதுசன் (வயது-20) ஆகியோருடன் இரு பெ ண்களும் காய மடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாய்ச் ச ண்டை கைகலப்பாக மாறி கு ழுமோ தலாக மாறிய நிலையில் வீடு புகுந்து இந்த தா க்குதல் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து கா யமடைந்த இருவரையும் பொலிஸார் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்த்ததுடன், பின்னர் அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *