Breaking News

தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர்! விரைந்து காப்பாற்றிய பொலிசார்

ஹட்டன், எபோட்ஸ்லி தோட்டப் பகுதியில் உள்ள ஆறு ஒன்றின் நீர் வீழ்ச்சி பகுதியில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞன் ஒருவனை ஹட்டன் பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (16) காலை வேளையில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவளை ரொத்தஸ்ட் பகுதியை சேர்ந்த 23வயதுடைய இளைஞன் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தமது வீட்டில் கூறி விட்டு வந்து குறித்த நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று தற்கொலைக்கு முயற்சித்த போது, பொதுமக்கள் மற்றும் பொலிஸார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்துள்ளனர்.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், இளைஞன் மனநோயினால் பாதிக்கபட்டவரா என அறிந்து கொள்ள உள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு – (எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வல்ல, அது கோழைத்தனமான முயற்சி – முடிவாகும். போராடி வெல்வதே வாழ்க்கையாகும். அதேபோல் குறித்த இளைஞன் தொடர்பான படங்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இனி வாழ நினைக்கும் அவருக்கு அது உளரீதியான தாக்கத்தையும், அவதானத்தையும் ஏற்படுத்தக்கூடும். அவரின் முகம் தெரியாத விதத்தில் தூரத்தில் இருந்து எடுத்த படமொன்றையே நாம் செய்திக்காக பயன்படுத்தியுள்ளோம். ஏனைய படங்கள் கைவசம் இருந்தும் ஓர் இளைஞனின் எதிர்காலத்துக்காக அவற்றை நாம் பயன்படுத்தவில்லை)

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *