Breaking News

யாழில் பாடசாலை சிறுமியை கடத்திச் சென்ற மன்மதன் இவர்தான்

யாழில் கடந்த 14ம் திகதி காலை 15 வயது பாடசாலை சிறுமி ஒருவர் பாடசாலைக்குச் செல்ல பேருந்திற்காக நின்ற சமயம் இளைஞன் ஒருவரால்  கடத்திச் செல்லப்பட்டு, சுமார் 8 மணித்தியாலங்களின் பின்னர் மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தமை யாவரும் அறிந்ததே.

அந்தவகையில் குறித்த இளைஞர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மாணவி ஒருவர் கடந்த 14ம் திகதி காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் செல்ல பேருந்திற்காக  கோண்டாவில் இ.போ.ச  முன்பாக நின்ற போது  மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் மாலை 3.30 மணியளவில் மாணவி மீளவும் அதே இடத்தில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.

மாணவியால் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடத்திச் சென்றவர் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் என்று அறிய முடிகின்றது.

சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை வழங்க மாணவியின் தாயார், மாணவியுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அன்று மாலை சென்றுள்ளார்.

அங்கு சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்த குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, மாணவியைத் தாக்கியதோடு முறைப்பாட்டை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மாணவியின் வீட்டுக்கு அன்று இரவே சென்று முறைப்பாட்டை வழங்க வருமாறு கேட்டுள்ளார்.

எனினும் மாணவியின் தாயார் மற்றும் கிராம மக்கள் பொலிஸாரின் செயலைக் கண்டித்ததுடன் முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம் செல்ல மறுத்துள்ளனர் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த மாணவியை கடத்திச்சென்ற இளைஞனின் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவர் மாணவ சிறுமியை ஆசை வார்த்தைகள் பேசி அளைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டிருக்கலாம் என இவரது சகபாடிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் இவர் அங்குவரும் இவ்வாறான சிறுமிகள், யுவதிகளின் தொலைபேசி இலக்கங்களை பெற்று பின்னர் தனது லீலைகளை அரங்கேற்றுவதாகவும், இவரின் சகபாடிகள் மேலும் பல புகைப்பட ஆதாரங்களை எமக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதேவேளை, ஒருவர் அளைத்தால் உடனே அவருடன் செல்வதா.. சுயபுத்தி இல்லையா.. எனும் கோபத்துடனே பொலிஸ் அதிகாரி சிறுமியை தாக்கியதாகவும், பின்னர் பலதடவைகள் சம்மந்தபட்டவர்களிடம் சென்று முறைப்பாட்டை வளங்குமாறு கேட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

மேலும், சிறுமி இதுவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *