Breaking News

யாழின் இரண்டாவது கொரோனா நோயாளியாக போதகர் அடையாளம்

யாழ்ப்பாணத்தில் மற்றொருவருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் 3 பேர் இன்று (ஏப்ரல் 1) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவார்கள் யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை ஆகிய இடங்களை சேர்த்தவர்கள் ஆவார்.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 146ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

அவர்களில் 17 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கையில்,

பலாலிப் பகுதியில் குறித்த அரியாலை போதகருடன் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்ததன் காரணமாக ஒரு கிழமைக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 20 நபர்களில் மேலும் 10 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவருக்கு கொரோனா COVID – 19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

இன்னும் சில மணித்தியாலங்களில் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *