Breaking News

யாழில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை!

கத்திக் குத்துக்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

பருத்தித்துறை வியாபாரி மூலையில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது -39) என்பவரே இவ்வாறு இன்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *