Breaking News

யாழில் பாடசாலை செல்ல நின்ற மாணவ சிறுமியை கடத்தி சென்ற குடும்பஸ்தர்!! முறைப்பாட்டை ஏற்க மறுத்து சிறுமியை தாக்கிய பொலிசார்

15 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் மாணவியின் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மாணவியையும் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது,

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மாணவி ஒருவர் இன்று காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் செல்ல பேருந்திற்காக நின்ற போது, கோண்டாவில் இ.போ.ச  முன்பாக ஒருவரால் மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் மாலை 3.30 மணியளவில் மாணவி மீளவும் அதே இடத்தில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.

மாணவியால் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடத்திச் சென்றவர் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் என்று அறிய முடிகின்றது.

சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை வழங்க மாணவியின் தாயார், மாணவியுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு இன்று மாலை சென்றுள்ளார்.

அங்கு சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்த குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, மாணவியைத் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ் அதிகாரி மாணவியையும் அவரது தாயாரையும் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மாணவியின் வீட்டுக்கு இன்று இரவு சென்று முறைப்பாட்டை வழங்க வருமாறு கேட்டுள்ளார். எனினும் மாணவியின் தாயார் மற்றும் கிராம மக்கள் பொலிஸாரின் செயலைக் கண்டித்ததுடன் முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம் செல்ல மறுத்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *