Breaking News

38 வயது பெண்ணை தாயாக்கிய 19 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி

திருகோணமலையில் 38 வயதுடைய பெண்ணொருவருடன் தகாத உறவு கொண்டு அவரை கர்ப்பிணி ஆக்கியமை தொடர்பாக  இளைஞன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை, இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரோதயநகர், புதுக்குடியிருப்பு, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான 19 வயதுடைய இளைஞன் வசிக்கும் பகுதியில் 38 வயதுடைய பெண்ணொருவர் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

பெண்ணுடன் சந்தேக நபரான இளைஞன் நீண்ட காலமாக பழகி வந்த நிலையில் தவறான பாலியல் நடவடிக்கைகள் மூலம் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இது தொடர்பாக திருகோணமலை பொது வைத்தியசாலையினால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *