Breaking News

டிக்டாக் மோகத்தில் இருந்த காதல் மனைவி: கழுத்தை நெறித்து கொலை செய்து தலைமறைவான கணவர்

மதுரையில் டிக்டாக் மோகத்தில் அடிக்கடி மாயமான காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் ஹர்விப்பட்டியை சேர்ந்த 32 வயதான அசோக் மற்றும் 27 வயதான சுதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து ஹர்விபட்டியில் வசித்து வந்தனர். ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் சுதா பியூட்டில் பார்லர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கணவர் அசோக் வேலை எதுவும் பார்க்காத நிலையில், இருவரிடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. கணவரின் நடத்தையில் மனம் முடைந்த சுதா, டிக்டாக் செயலியில் ஆர்வம் காட்டத் துவங்கினர்.

வசீகரமான காதல் பாடல்களுக்கு டிக்டாக் செய்து பதிவேற்றம் செய்து மகிழ்ந்ததாக கூறப்படுகிறது.

கணவர் அசோக்கிற்கு இந்த தகவல் தெரியவர, இதனால் அசோக்-சுதா இடையே மோதல் வழுத்தது. இந்நிலையில் இரு மாதங்களுக்கு திடீரென சுதா வீட்டிலிருந்து மாயமானார். அதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்ட மறுநாளே மீண்டும் வீடு திரும்பினார்.

தகாத டிக்டாக் சவகாசம்தான், சுதா அடிக்கடி மாயமாக காரணம் என கருதியதால், சுதா மீதான வெறுப்பின் உச்சத்திற்கு சென்றார் அசோக். தினமும் குடித்து வந்து மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வந்த அசோக், மனைவி சுதா உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த அசோக் அங்கிருந்து தப்பியோடினார்.

காலையில் சம்பவம் தெரிந்து சுதாவின் தந்தை ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *