Breaking News

#BREAKING | கொரோனாவுக்கு இதுவரை 5 இந்தியர்கள் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. மத்திய அரசின் தகவல்களின்படி தற்போது வரை 142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இன்றைய தினம் அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளன.

தேசிய பேரிடராக கொரோனா பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என்று பொது மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.

மக்களும் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும், ஈரானில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை இன்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம், வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

இதற்டையே, மத்திய அரசு சில அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 22-ம் தேதி முதல் அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் ஒருவாரம் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சர்வதேச எல்லைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உள்பட்டவர்களை வீட்டில் இருக்க அறிவுறுத்த மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய பணி தவிர மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

விமானம் மற்றும் ரயில்களில் மாணவர்கள், நோயாளிகள் தவிர அனைவருக்கும் சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசுப்பணியாளர்களில் 50 சதவிகிதம் பேர், வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

குழந்தைகளுக்கு சாப்பாட்டில் எலி மருந்து வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிய தாய்!

இந்தியாவில் பிள்ளைகளை பிரிந்து 26 ஆண்டுகள் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தற்போது பிள்ளைகளுடன் சேர்ந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *