Breaking News

பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த தாய்!

ஆண்டிப்பட்டி அருகே எருக்கம்பால் கொடுத்து பெண் சிசுவை கொலை செய்த தாய் உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – கவிதா தம்பதி.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் 2வது முறையாக கடந்த மாதம் 26 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் பிறந்த 6 நாட்களிலேயே அந்த பெண் சிசு உயிரிழக்க, உடல் நலக் குறைவால் இறந்துவிட்டதாகக் கூறி பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர்.

குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் வர, இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கன்னியபிள்ளைபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஆண் வாரிசை எதிர்பார்த்திருந்த தாய் கவிதா, பெண் சிசு பிறந்ததால் மாமியார் தூண்டுதலின் பேரில் எருக்கம்பாலை கொடுத்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து தாய் கவிதா, மாமியார் செல்லம்மாள் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

கொழுந்தனின் கார் மற்றும் பைக்கை அ டி த்து நொறுக்கிய அண்ணி… காரணம் என்ன?

கோவையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் சகோதரருடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொ று க்கியுள்ள சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *