Breaking News

காணாமல் போயிருந்த காதல் ஜோடி!! தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றும் சுசிதரன் (28-வயது) இரத்தினபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27-வயது) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் தெரிவித்ததாவது,

காணாமற்போயிருந்த காதல் ஜோடி 7 நாள்களின் பின் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்கள் பரந்தன் ஓவிசியர் கடைச் சந்திக்கு அண்மையாகவுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் பழுதடைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *