மருத்துவ குணம் நிறைந்த பழங்களுள் நாவல் பழமும் ஒன்றாக கருதப்படுகின்றது.
நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
நாவல் பழத்தில் எந்த அளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றதோ அதே அளவு இதன் விதைகளிலும் காணப்படுகின்றது.
இது பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. அதனால் தான் பல ஆயுர்வேத மருத்துவத்திலும் இந்த விதையின் பெரிதும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
குறிப்பாக இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்பதே முதன்மையான குறிப்பாகும்.
ஏனெனில் இந்த நாவல் விதையில் jamboline மற்றும் jambosine என்ற மூல பொருட்கள் உள்ளன. இதுதான் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது.
அந்தவகையில் நாவல் பழத்தின் விதைகளை எடுத்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
எப்படி சாப்பிட வேண்டும்?
முதலில் நாவல் பழத்தை உரித்து அவற்றின் உள் இருக்கும் விதையை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.
பின் விதைகளை சுத்தமாக கழுவி அவற்றை வெயிலில் 4 நாட்கள் உலர விட வேண்டும். அவை நன்கு காய்ந்த பிறகே வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
அடுத்து அந்த தோலை உடைத்து எடுத்தால், பச்சை நிறத்தில் சிறிய கோட்டை அதனுள் இருக்கும்.
இதனை மறுபடியும் 2 நாட்கள் வெயிலில் உலர விட்டு எடுத்து, நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின் இவற்றை சலித்து கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பொடியை நீரில் 1 டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வர தொடங்கும்.
நன்மைகள் என்ன?
இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்தாகும். உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.
சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் பசி எடுக்காமல் இருந்தால் அவர்களுக்கு நாவல் பெரிதும் உதவும்.
ஜீரண கோளாறுகள், வயிற்று புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றை இது சரி செய்யும்.
நாவல் இலைகளை நன்கு கழுவி அவற்றை மென்று சாப்பிட்டால் அல்சர் குணமடையும்.
இவற்றில் உள்ள அதிக படியான இரும்புசத்து மற்றும் வைட்டமின் சி ரத்தத்தின் சிவப்பு அணுக்களை உயர்த்துகின்றது.
இது ஹீமோகுளோபின் அளவை உயர்த்த வழி செய்கிறது. அத்துடன் ரத்தத்தை சுத்திகரிக்கவும் இந்த நாவல் பெரிதும் உதவுகிறது.
மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு மிக சிறந்த முறையில் இது பயன்படும்
முக்கிய குறிப்பு
மரபணு மாற்றம் பெற்ற நாவல் பழத்தை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும்.
அத்துடன் கர்ப்பிணிகள் இந்த நாவலை சாப்பிடுதல் உகந்தது அல்ல
மேலும் மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி