Breaking News

தேனியில் க ள்ளக் கா தலுக்காக மனைவியை கொ லை செ ய்த ராணுவ வீரன்!

தேனி மாவட்டத்தில் கள்ளக்காதலிக்காக மனைவியைக் கொன்று தற்கொலை என  ராணுவ வீரர் நாடமாடியுள்ளார். போலீசார் அவரையும் அரவது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் கைது செய்யதுள்ளனர்.

தேனி மாவட்டம் போடி நாயக்கனுார் புது காலனி ஜெயம் நகரைச் சேர்ந்தவர்கள் முனீ்ஸ்வரன் – சுப்புலட்சுமி தம்பதி. முனீஸ்வரன் – சுப்புலட்சுமி தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் முனீஸ்வரன் ராணுவத்தில் பணியாற்றியதால் அந்த நகரில் உள்ள ராணுவக் குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அங்குள்ள மற்றொரு ராணுவ வீரரின் மனைவிக்கும் முனீஸ்வரனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த சுப்புலட்சுமி, கணவர் முனீஸ்வரனைக் கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறுகள் நடந்தன.

ஒரு கட்டத்தில், தனது கள்ளக்காதலுக்கு மனைவியும் குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக எண்ணிய முனீஸ்வரன் அவர்களை போடிநாயக்கனுாருக்கு அனுப்பி விட்டார்.

போடியில் கணவர் வீட்டில் சுப்புலட்சுமி குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் மாமனார், மாமியாரிடம் கணவரின் நடத்தை பற்றி கூறியுள்ளார். அதுவும்  பலனில்லை.

அதேநேரம், மாமனார் ராஜு மற்றும் மாமியார் செல்வி மற்றும் கணவரின் தம்பி சதீஷ்குமார், கணவரின் சித்தி அன்னலட்சுமி, அன்னலட்சுமியின் மகன் பால முனீஸ்வரன் ஆகியோர் சேர்ந்து சுப்புலட்சுமியை சித்ரவதைகள் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் முனீஸ்வரன், தன் மனைவி சுப்புலட்சுமிக்கு குடும்பச் செலவிற்குக் கூட பணம் அனுப்பாமல் நிறுத்தி விட்டார்.

அதனால், சுப்புலட்சுமி நுாறு நாள் வேலைக்கு சென்று தன் குழந்தைகளைப் படிக்க வைத்து வளர்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே தன் தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என சுப்புலட்சுமி கேட்க மாமியார் அனுமதிக்க மறுத்து விட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முனீஸ்வரன் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கணவர் வீட்டில் துாக்கி்ல் தொங்கிய நிலையில் சுப்புலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சுப்புலட்சுமியின் பெற்றோர் புகாரளித்தனர்.

தேனி அரசு மருத்துவமனையில் நடந்த உடற்கூறாய்வில், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கணவர் முனீஸ்வரனைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது சுப்புலட்சுமியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

வெள்ளிக்கிழமை அன்று முனீஸ்வரனின் கள்ளக்காதல் குறித்து சுப்புலட்சுமி சண்டையிட, தகராறின் உச்சத்தில் சுப்புலட்சுமியை முனீஸ்வரன் கீழே தள்ளி விட்டார்.

பின்னர் தாய், தந்தை, சித்தி ஆகியோரின் துணையுடன் சுப்புலட்சுமியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று மின்விசிறியில் மாட்டி விட்டார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது சுப்புலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடியுள்ளார்.

சுப்புலட்சுமி கொலை வழக்கில், முனீஸ்வரன் அவரது தந்தை ராஜு, தாய் செல்வி, தம்பி சதீஷ்குமார், சித்தி அன்னலட்சுமி, அன்னலட்சுமியின் மகன் பாலமுனீஸ்வரன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தப்பியோடிய முனீஸ்வரனின் மற்றொரு சகோதரர் ராஜசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

உ யி ருடன் அண்ணனை இதில் வைத்து சா கு ம்வரை காத்திருந்த தம்பி: வெளியான பகீர் சம்பவம்!.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உ ட ல்நலம் பாதிக்கப்பட்ட அண்ணனை உ யி ருடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *