Breaking News

இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளலாம்:

இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் குருதி உறைதல் தொடர்பான பரிசோதனையை செய்து, அந்த பரிசோதனை அறிக்கையை வைத்தியரிடம் காண்பித்து அவர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது சிறந்ததாகும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சம்பத் விதானவசம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இதய நோயாளர்களில் பெரும்பாலானோர் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்பவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறான நோயாளர்கள் தற்போது கொவிட் தொற்றின் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே இவர்கள் …

Read More »

சிறுநீரக நோயாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

சிறுநீரக நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளானால், அவர்கள் சிகிச்சை அளிக்கப்படும் வைத்தியசாலையைத் தொடர்புகொள்வது மிகவும் முக்கியம் என்று தேசிய சிறுநீரக மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும், மாளிகாவத்தை தேசிய சிறுநீரக ஊடுபகுப்பு மற்றும் சிறுநீரகமாற்று அறுவைசிகிச்சை நிறுவகத்தின் செயலாளருமான டொக்டர் அர்ஜுன மாரசிங்க தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நபர் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு பொருத்தமானவரா இல்லையா என்பதை சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையின் அறிவுறுத்தலைக் கொண்டு முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார். பெரிட்டோனிடிஸ் நோயாளிகள் உட்பட, எல்லா சிறுநீரக நோய்க்கும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் தடுப்பூசி போட வேண்டும் …

Read More »

வெள்ளிவரை மூடப்படுகிறது தொழில் திணைக்களம்;

தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் உள்ள அனைத்து ஊழியர் சேமலாப நிதி உதவி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது வெள்ளிக்கிழமை (20) வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிதி செலுத்தும் கிளைகளின் பல அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையளர் நாயகம் பிரபத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

Read More »

5 மொழிகளில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் படம்: ஊர்வசி ரவ்துலா!

தமிழ் திரையுலகில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக  நடிகை ஊர்வசி ரவ்துலா தெரிவித்துள்ளார். தொழிலதிபர் லெஜண்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இப்படத்தில் யோகிபாபு, ரோபோ ஷங்கர், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக …

Read More »

மீனவ கிராமங்களை அபிவிருத்தி செய்யுமாறு பிரதமர் ஆலோசனை;

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடற்றொழில் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், அவரது எண்ணக்கருவுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட மீனவ கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு,  பிரதமரால், இன்று (16) வீடமைப்பு விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்தவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே,  பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். பிரதமர் கடற்றொழில் அமைச்சராக சேவையாற்றிய காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள கடலோரப் பிரதேசங்கள் மற்றும் குளங்களை அண்மித்ததாக 60 …

Read More »

பதவி மாற்றத்தால் கண்கலங்கிய பவித்திரா!

இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படும் என்று, தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொள்வதாகவும் தெரிவித்தார். இன்று (16) அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், சுகாதார  அமைச்சிலுள்ள அதிகாரிகளிடம் உரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்பாராத தருணத்தில் தனக்கு இந்த அமைச்சு மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தான் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வரை தனது அமைச்சுப் பதவியில் மாற்றம் வரும் என தான் அறிந்திருக்கவில்லை என்றார். …

Read More »

பண்டாரவளை, பதுளை நகரங்களின் கடைகளுக்கு பூட்டு!

கோவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பண்டாரவளை,பதுளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களை ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய வர்த்தகர்கள சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்றிரவு 10 மணிமுதல் எதிர்வரும் 23 ஆம்திகதிவரை இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், பதுளையிலுள்ள அனைத்துக் கடைகளையும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை கோவிட் அபாய நிலை காரணமாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை!

உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிபுக்களின் அடிப்படையில் இலங்கை அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று அறிக்கையிடப்பட்ட கொரோனா தொற்றுக்கள் மற்றும் கொரோனா மரணங்களின் அடிப்படையில் இலங்கை அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா மரணங்கள் விடயத்தில் உலக அளவில் இலங்கை 14ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிய வலயத்தில் இலங்கை 10ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகளவில் கொரோனா தொற்று மற்றும் மரண வீதம் என்பவற்றை கணக்கிடும் வேல்ட்ரோமீற்றர் இணையத்தளத்தின் அடிப்படையில் இது  அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,  வரலாற்றில் மிகவும் மோசமான நிலமையில் தற்போது இலங்கை …

Read More »

அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானம்!

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை பள்ளிவாசல்களில் நடத்தப்படும் அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமயம் மற்றும் கலாசார விவகார திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐந்து வேளை ஜமாத் தொழுகை உட்பட அனைத்து தொழுகைகளையும் நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூம்மா மற்றும் ஜனாஸா தொழுகைகள், குர் ஆன்,நிக்கா மஜ்லிஸ் என அனைத்து சபை நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களுக்கு தனிப்பட்ட தொழுகையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூடிய அளவாக 25 பேர் மாத்திரமே பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

வீதிக்கு இறங்கிய அப்ப கடைக்காரரால் பரபரப்பு!

தெரணியகல நகரில் அப்பம் கடையொன்றை நடத்தி வரும் நபர் ஒருவர், சமையல் எரிவாயு கோரி, வீதிக்கு இறங்கி போராட்டம் ஒன்றை இன்று (16) முன்னெடுத்தார். குறித்த அப்பக் கடை வருமானத்தில் தமது வாழ்வாதாரத்தை நடத்தி வரும் இவர்,கடந்த பல வாரங்களாக தமக்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை என்றும் இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனது அப்பக் கடை மூடப்பட்டுள்ளதால், தமக்கு எவ்வித வருமானமும் இல்லை என்பதுடன், இதனால் நோயாளியான தனது தாய்க்கு சிகிச்சை செய்வதற்கு கூட பணமில்லை என தெரிவித்து, நகர மத்தியில், …

Read More »