Breaking News

வீட்டுக்கே மருந்துகளை வரவழைக்க விசேட இலக்கம் அறிமுகம்!

அரச வைத்தியசாலை கிளினிக்குகளில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை வீட்டுக்கு பெற்றுக்கொள்ள விசேட அலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 0720720720 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் இந்த சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

கொரோனா தொற்றியவர் வீட்டிலேயே மரணம்

பண்டாரவளை, கஹத்தேவெல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த 62 வயதான நபரொருவர், தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பதுளை பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், மூன்று நாள்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் (17) காலை உயிரிழந்தார். இதேவேளை, பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதிய தொற்றாளர்கள் 59 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதில், 37 பேர் உடனடி அன்டிஜன் பரிசோதனையில் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதித்து …

Read More »

சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள கோவிட் தரவுகள்! – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

நாளாந்த கோவிட் இறப்புகள் மற்றும் வழக்குகள் தொடர்பான தகவல்கள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை கூறியுள்ளார். கோவிட் -19 இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட தரவுகளின் துல்லியத்தன்மை குறித்து பல பிரிவினர் கவலைகளை எழுப்பியுள்ளனர். கோவிட் தொாடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் கோவிட் தரவை மாற்ற முயற்சிக்கும் நபர்கள் மீது தேவையான நடவடிக்கை …

Read More »

மீண்டும் அமைச்சரவையில் திருத்தம்

அமைச்சரவையில் மற்றுமொரு திருத்தம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஷஷிந்திர ராஜபக்ஷ இந்த விடத்தை உறுதி செய்துள்ளார். அதற்கமைய பல அமைச்சரவை அமைச்சுக்கள் மாற்றமடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.

Read More »

கொவிட் மரணங்களை தகனம் செய்ய கட்டணம் அறவிட தீர்மானம்

கொவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை இலவசமாக தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும், கட்டணம் அறவிட தெஹிஅத்தகண்டிய பிரதேச சபை தீர்மானித்துள்ளது. கொவிட் சடலங்களை தகனம் செய்யும் போது, அந்த குடும்பங்களிடம் பணம் அறிவிட, தெஹிஅத்தகண்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றின் போது வருமானம் குறைந்த பிரதேச சபையாக இவ்வாறு பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பிரதேச சபையின் தலைவர் சுதத் தேஷபிரியகே தலைமையில் இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தெஹிஅத்தகண்டிய பிரதேச சபையில் இடம்பெற்ற …

Read More »

திடீரென மயங்கி விழுந்த பெண் மரணம் -கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு

பேருவளை பிரதேச பாடசாலை ஒன்றில் PCR பரிசோதனை மேற்கொள்ள சென்ற பெண் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான வரிசையில் நின்ற சந்தர்ப்பத்தில் இந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த வரிசையில் நின்றவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதென சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More »

நோயெதிர்ப்புத் திறன் கூடிய ஒற்றை டோஸ்

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் ஒற்றை டோஸ் அதிக நோயெதிர்ப்புத் திறன் கொண்டது என்று ஒரு புதிய ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் இரண்டு விஞ்ஞானிகள் உட்பட உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கல் நன்மை பயக்கும் என்றும் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஸ்புட்னிக் முதல் டோஸின் நோயெதிர்ப்பு எதிர்ச்செயல்களை ஆராய்ந்தனர். இலங்கை மக்கள்தொகையில், அஸ்ட்ரா ஸெனெகாவின் முதல் டோஸைப் பெற்ற 4 வாரங்களுக்குப் பின்னர் இருந்த …

Read More »

கொழும்பில் கொரோனாவுக்கு பலியான 17 வயது மாணவி

கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றில் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அரசாங்கம் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று கொழும்பிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 17 வயது மாணவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் இசிப்பத்தன கல்லூரியைச் சேர்ந்த 18 வயது மாணவன் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

போலி அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளை அச்சிட்டவர் கைது!

தேசிய லொத்தர் சபையால் வெளியிடப்படும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களைப் போன்று 11 போலி சீட்டுகளை சட்டவிரோதமாக அச்சிட்ட ஒருவரைப் பலாங்கொடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பலாங்கொடை நெல்லிவள பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபரிடம் இருந்து கடந்த 06ஆம் திகதி விநியோகிக்கப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்த 3 வெற்றி இலக்கங்களை கொண்ட 11 அதிர்ஷ்ட இலாப சீட்டுக்களைப் பலாங்கொடை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சீட்டுக்கள், 2 ஆயிரம் ரூபா வெற்றி தொகைக்கு மேலதிகமாக பரிசு கிடைக்கும் வகையில் …

Read More »

வாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம்!

முகநூல் நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடகமான வாட்ஸ்ஆப்பில் அண்மையில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், பலரும் விரும்பும் ஒரு வசதியும் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஆர்க்கைவ்ட் சாட்ஸ் போல்டர் என்ற புதிய வசதி மூலம், உங்களுக்குத் தேவையாற்ற சாட்டுஸ்களை, நிரந்தரமாக மறைத்து வைக்க புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. வழக்கமாக, நாம் விரும்பாத அல்லது தேவையற்ற சாட்ஸ்களை ஆர்க்கைவ் செய்து வைத்திருப்போம். அது அப்போதைக்கு கீழே மறைந்திருந்தாலும், எப்போது அந்த எண்ணிலிருந்து புதிய தகவல் வருகிறதோ, அப்போது அது ஏனைய தகவல்களைப் போலவே முதல் …

Read More »