Breaking News

டாணாக்காரன் ஹீரோயின் அஞ்சலி நாயர்-ஆ இது..? இப்டி இருக்காங்க ரசிகர்கள் ஷாக்..!

தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான தான் டாணாக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தான் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி நாயர். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் நடிகை அஞ்சலி நாயர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நெடுநல்வாடை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை அஞ்சலி நாயர்.

அந்த திரைப்படம் பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த அஞ்சலி நாயர் தன்னுடைய அழகின் காரணமாக மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார். பிறகு சில விளம்பரப் படங்களில் கூட நடித்திருக்கும் இவர் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த நெடுநல்வாடை திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசிய இவர் இந்த திரைப்படம் கொரோனாவால் ரிலீஸ் தள்ளிப்போனது சற்று இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இரண்டு ஆண்டுகளாக இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.

ஆனால் டாணாக்காரன் திரைப்படத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் பணியாற்றக்கூடிய பெண்ணாக நடித்திருந்தேன். அங்கு பயிற்சிக்கு வரும் விக்ரம் பிரபு என்னை காதலிப்பது போல காட்சிகள் இருந்தது.

போலீசாக நடிப்பதற்கு பெரிய பயிற்சி எதுவும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. இயக்குனர் சொன்னதை அப்படியே நாடித்துக் கொடுத்தேன் என்று பேசியிருக்கிறார். மேலும், இயக்குனர்களின் விருப்பமான நடிகையாக நான் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

நிச்சயம் அதற்கான முயற்சியில் நான் எப்போதும் இருப்பேன் என்று கூறி இருக்கிறார் அஞ்சலி நாயர். சமீப காலமாக, தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார். இதை பார்த்த ரசிகர்கள் டாணாக்காரன் படத்தில் நடித்த அஞ்சலி நாயரா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை மணிரத்தினம் அவர்கள் தான் இயக்கி இருந்தார் கல்கி இந்த திரைப்படத்தின் கதையை எழுதினார். மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

மிகப்பெரிய பொருட்செலவில் லைக் ஆன நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது இந்த திரைப்படத்தை ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். தமிழகத்தில் இந்த திரைப்படம் 168 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் வசூலில் முன்னிலையில் இருந்த விசுவாசம், பாகுபலி, ஆகிய திரைப்படத்தின் வசூல் சாதனையை தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடித்துள்ளது இரண்டாவது இடத்தில் 168 கோடி வசூலித்து நிலைத்து நிற்கிறது. முதலிடத்தில் 190 கோடி வசூலித்து நிலைத்து இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் வசூலை  இன்னும் ஒரு சில நாட்களில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை உலக அளவில் 395 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது கிட்டத்தட்ட 400 கோடி நெருங்கி விட்ட நிலையில் விரைவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒருவர் திரைப்படம் வெற்றி திரைப்படம் என்பது படத்தின் வசூலை வைத்து கணிக்கப்படுகிறது அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூலிலும் நல்ல வசூல் செய்து மிகப்பெரிய  வெற்றி திரைப்படமாக பல திரைப்படங்கள் அமைந்துள்ளது.

அந்த லிஸ்டில் பொன்னியின் செல்வன் திரைப்படமும் தற்பொழுது இணைந்துள்ளது உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ள பொன்னியின் செல்வம் விரைவில் 500 கோடி வசூலித்து   ஒட்டுமொத்த தமிழ் திரைப்படத்தையும் ஓரங்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்டு பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். எனவே பாரதி தற்பொழுது டிஎன்ஏ டெஸ்ட் மூலம் தன்னுடைய குழந்தைகள் தனக்கு பிறந்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறார் இந்நிலையில் இவர் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவமனையில் கணவர் ஒருவர் பிரசவமான மனைவியை சந்தேகப்பட்டு அங்கு கூச்சல் போடுகிறார்.

அப்பொழுது பாரதி அந்த கணவரிடம் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்தால் அனைத்து உண்மைகளும் தெரிந்து விடும் எனக் கூற உடனே கண்ணம்மா ஊருக்கு தான் உபதேசமா நீங்க எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பீங்க என கேட்கிறார். அதற்கு பாரதியும் கண்ணம்மா கேட்டது சரிதான் என யோசிக்கிறார் தன்னுடைய மகளான ஹேமா மற்றும் லட்சுமி இவருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *